சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்காகவும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் ஒரு மாணவர் என்ன செய்தார் தெரியுமா? அதாவது Eradajere Oleita என்ற மாணவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மக்கள் கூடும் இடங்களுக்கும், கடைகளுக்கும் சென்று சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அதன்பிறகு சிப்ஸ் பாக்கெட்டுகளை வைத்து waterproof bed செய்துள்ளார். இதை வீடு இல்லாமல் கஷ்டப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளார்.
அதன் பிறகு உங்களிடம் சிப்ஸ் பாக்கெட் கிடைத்தால் அதை என்னிடம் தாருங்கள். நான் உங்களுக்கு waterproof bed செய்து தருகிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் ஒரு waterproof bed செய்வதற்கு 300 சிப்ஸ் பாக்கெட்டுகள் தேவைப்படும். இதை செய்து முடிக்க குறைந்தது 4 மணி நேரமாகும். மேலும் இதை கடினமாக நினைக்காமல் Eradajere Oleita சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்காகவும், வீடு இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலும் இதை செய்து வருகிறார்.