Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் திடீர் மழையால் மின்சாரம் தடை…. மின்சார ரயில் சேவை பாதிப்பு…. தெற்கு ரயில்வே தகவல்…!!!!

சென்னையில் பெய்த திடீர் மழையால் மின்சார ரயில் சேவைகள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை முடங்கியது.

சென்னை மாவட்டத்தில் அசானி புயலின் தாக்கத்தினால் நேற்று முன்தினம் திடீர் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்நிலையில் மின்சார ரயில் சேவைகளும் நேற்று முன்தினம் காலை 10 முதல் 20 நிமிடங்கள் வரை முடங்கியதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சரி செய்தனர் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலை பெய்த கன மழையால் அதிகமாக காற்று அடித்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், ரயில் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மேலும் சிக்னல் காரணமாக நேற்று முன்தினம் 18 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 22 மின்சார ரயில்களின் சேவை 10 முதல் 20 நிமிடங்கள் வரை பாதித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |