Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….51 நாட்கள் கோடை விடுமுறை….. மாநில அரசு அறிவிப்பு…!!!!!!!

டெல்லி  பள்ளிகளுக்கு ஜூன் 18 முதல் 20-ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா  தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்குப்பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகின்றது. இருப்பினும் கோடை வெயில் கொளுத்துவதன் காரணமாக பல மாநிலங்களில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மே 21 ம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பள்ளி நேரத்தில் மாற்றங்களை செய்து இருக்கின்றனர். இந்த நிலையில் டெல்லி பள்ளிகள் ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை கோடை விடுமுறையை தொடங்கும் என டெல்லி கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் மாணவர்களிடம் கற்றல் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனை ஈடு செய்வதற்காக டெல்லி பள்ளிகளில் கோடை கால வகுப்புகள் அவசியம் என DoE அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக டெல்லி பள்ளிகளுக்கு இன்று முதல் ஜூன் 28, 2022 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் மேற்குவங்கம், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் மே முதல் வாரத்தில் இருந்து பள்ளி கோடை விடுமுறையை தொடங்கியிருக்கின்றன. இதற்கிடையில் மீண்டும் கொரோனா தொற்று  அதிகரித்து வருவதன் காரணத்தால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும்  பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது. மேலும் நொய்டா, காசியாபாத் மீரட், ஹாபூர், புலந்த்ஷாஹர், நாக்பூர் மற்றும் லக்னோவில் உள்ள பள்ளிகளில்  அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |