Categories
தேசிய செய்திகள்

யானையைத் தாக்கிய முரடன்…. மெர்சல் காட்டிய காணொலி வைரல்..!

வயல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்த யானையை பின்னே சென்று தாக்கிய நபரை அந்த யானை ஓட ஓட விரட்டியடித்த காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

வயல்வெளியில் நடந்துசென்ற யானை ஒன்றை அதன் பின்னே சென்று மரத்தடியால் இளைஞர் ஒருவர் தாக்குவது போன்ற காணொலியை இந்திய வனப் பணி (ஐ.எஃப்.எஸ்) அலுவலர் சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொலியில், யானை வயல்வெளியின் வரப்பில் நடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதன் பின்னே ஓடிச்செல்லும் ஒரு இளைஞர் தடி கொண்டு யானையின் பின்புறத்தில் கடுமையாகத் தாக்குகிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த யானை தனது வாலை சுருட்டிக்கொண்டு பிளிறியபடி தன்னை தாக்கிய இளைஞரை ஓட ஓட விரட்டியடிக்கிறது. நல்வாய்ப்பாக அந்த யானையிடம் இளைஞர் சிக்காமல் உயிர் பிழைக்கிறார்.

Man escapes after hitting innocent elephant

இந்தக் காணொலியை பதிவிட்ட சுசாந்தா நந்தா, “தனது சுய விளம்பரத்திற்காக யானையை ஒரு கோழை தாக்கியுள்ளார். அந்த முட்டாள் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்தார். இரக்கம் கொள்ள வேண்டும் சகோதரா” எனப் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |