தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை அவர்களுக்காக செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும் இந்த உதவித்தொகை வழங்கும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்காக மாணவர்களின் விவரங்களை அனுப்புமாறு இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.