டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்…
குரூப் 4 தேர்வு முறைகேடு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் பணம் கொடுத்து தேர்வு எழுதிய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் .கடந்த செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 பதவிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்தது உறுதியாகி உள்ளது .
இதனை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளளது .முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட பள்ளிக்கல்வித்துறை ஊழியர் ரமேஷ் ,எரிசக்தி துறை பணியாளர் திருக்குமரன், டிஎன்பிஎஸ்சி அலுவலர் ஓம்காந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
அதன் தொடர்ச்சியாக பணம் கொடுத்து எழுதிய திரு வேல்முருகன், ராஜசேகர் ஸ்ரீநிவாசன் ,காலிஸ் ஆகியோர் நேற்று சிக்கினார் .இந்த நிலையில் பணம் கொடுத்து தேர்வு எழுதியதாக கடலூர் மாவட்டம் பன்ரொட்டியில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் இவர் பெயர் சிவராஜ் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது .முக்கிய குற்றவாளியாக இடைத்தரகர் சென்னை முகப்பேரை சேர்ந்த ஜெய குமாரை போலீசார் தேடி வருகின்றனர் .
இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .முறைகேட்டில் உயர் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது ..ஆனால் அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாகாவும் புகார் எழுப்பியுள்ளது..