அமெரிக்காவில் நடைபெற்ற நாய்கள் வண்டி மாரத்தான் போட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்காவில் 36 -ஆவது ஜான் பியர்கிரீஸ் நாய்கள் வண்டி மாரத்தான் நேற்று சுற்றி பனிகளால் சூழப்பட்டுள்ள துலுத் நகரில் தொடங்கியது. துலுத் நகரில் இருந்து வடக்கில் கிராண்ட் போர்டேஜு(Grand Portage)நோக்கி 482 கி.மீட்டருக்கு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
இதில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த போட்டியில் ஒரு அணியில் 11 நாய்கள் ஒருவரை இழுத்து செல்லலும். நாயின் கால்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் கலர் கலராக சூ போன்ற துணி அணிந்து வேகமாக ஓடி வருகிறது. இது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு நடந்த இந்த மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்ற ரியான் ரெடிங்டன் முதலிடத்திலும், நடப்பு சாம்பியனான பிளேக் ஃப்ரீக்கிங் இரண்டாவதாகவும் சோதனைச் சாவடியை எட்டி விட்டனர். இந்தநிலையில் நாளை காலை மாரத்தான் போட்டி நிறைவடையும் என பார்வையாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.