Categories
தேசிய செய்திகள்

2 ஆண்டுகளாக….. 20 நாய்களுடன் அடைத்து வைத்து…. 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்….!!!

இரண்டு ஆண்டுகளாக 20 நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டு 11 வயது சிறுவனுக்கு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

மராட்டியத்தின் புனே நகரில் கொந்தவா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுவன் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதனை அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கவனித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு அந்த அமைப்பினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு குடியிருப்பின் வெளியில் பூட்டப்பட்டிருந்தது. ஆனால் சிறுவனும் நாயும் உள்ளே இருந்தனர்.

நான்கு நாய்கள் இறந்த நிலையில் கிடந்தது. அந்த குடியிருப்பில் இருந்து விலங்குகளின் கழிவுகள் அகற்றாமல் தூய்மையற்ற நிலையில் இருந்தது. அந்தச் சூழலில் சிறுவன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து சிறுவனை மீட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுவன் நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டு இருந்த காரணத்தினால் நாய் போன்று செயல்பட தொடங்கியுள்ளார். பின்னர் அந்த குழுவினர் சிறுவனின் தந்தையை கண்டுபிடித்து தகவல் அளித்தனர். அவர் ஒரு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சிறுவனின் தாயார் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

இவர்கள் இருவரும் நாய்களின் மீது அதிக அன்பு கொண்டுள்ளனர். அதனால் வீட்டில் அதிக அளவில் நாய்களை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய்களுடன் சேர்த்து இந்த சிறுவனை அடைத்து வைத்து விட்டு அவர்கள் வேலைக்கு சென்று உள்ளன. இதன் காரணமாகவே இந்த சிறுவன் இப்படி பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது பெற்றோரை கைது செய்ய முடிவு செய்துள்ளதாக காவல் ஆய்வாளர் சர்தார் படேல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |