கல்லீரல் என்ற மண்ணீரல் கோளாறு ஏற்பட காரணமாக அமைவது உணவு மாறுபாடு ,அதிக புணர்ச்சி, தூக்கமின்மை, அதிக அலைச்சல்,, ஓய்வின்மை, பித்தம் நிலையில் இருந்து கூடுவது மற்றும் குறைவது முதலியன காரணமாகும் பித்தம் ரத்தத்தில் பரவி விட்டால் படிப்படியாக பல துன்பங்கள் அதிகரிக்கும் இதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டவர மற்றும் தீர்ப்பதற்கான நிவாரணத்தை இந்த தொகுப்பில் காண்போம்.
நிவாரணம்:.
நெல்லிக்காய் பருப்பை பதார்த்தங்கலில் கலந்து உண்டால் பித்தம் சாந்தமாகி கல்லீரல் பலப்படும். இதுதவிர நெல்லிக்காய் பிஞ்சு ,கடுக்காய், ஊறுகாயாக உபயோகிக்கலாம்.
வன்னி மரத்தின் வேரை கொதிக்க வைத்து குடித்து வந்தால் கல்லீரல் வீக்கம் வலி கட்டுப்படும்.
துளசி குடிநீர் அல்லது வேப்பம்பட்டை குடிநீர் இவை பித்த கபத்திற்கு உரிய மருந்துகள்.
இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு காலையில் குடிக்க அழல், ஐயம் ,கிராணி ஆகிய முக்குற்றம் நோய்களின் வறட்சியும் ,வெப்பமும் நீங்கும்.
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி மிளகு உப்பு சீரகம் சுக்கு சேர்த்து பொடியாக்கி சோற்றில் ஊற்றி கொஞ்சம் நெய்விட்டு கலந்து உண்ண கல்லீரலில் ஏற்படும் பித்தம் முதலியன நீங்கும்.
கோரைக் கிழங்கை தோல் நீக்கி கசாயம் தயாரித்து பசும் மோரில் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள அழுக்கு களிமண் இவற்றை பேதி மூலம் வெளியேற்றி விடும் கல்லீரல் பலப்படும்.