மகனின் இறந்த தினத்தை அனுசரித்து பெற்றோர் சிலை வடிவமைத்து சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுடைய மகன் 48 வயதுடைய ஹரிஹரன். இவர் செவிலிமேடு ஊராட்சியில் தி.மு.க கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 2021 ஆம் வருடம் மாரடைப்பால் இறந்துள்ளார். அவரது முதலாம் வருடம் நினைவு நாளான நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டு, அதனையொட்டி வீட்டிற்கு அருகில் பெற்றோர் சிறிய கோவில் ஒன்றை கட்டி அதில் தனது மகனின் சிலையை வடிவமைத்து சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.