Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் 40 வருடங்களில் இல்லாத வகையில்… கடுமையாக அதிகரித்த பணவீக்கம்….!!!

ஜெர்மன் நாட்டில் கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக பணவீக்கம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் பல ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள்களின் விலையானது வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. மேலும், பொருளாதாரம் பாதிப்படையக்கூடிய நிலை பல நாடுகளில் உண்டாகியிருக்கிறது.

இதில், முக்கியமாக ஜெர்மன் நாட்டில் கடந்த 40 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. அந்நாட்டில் கடந்த மாதத்தில் எரிபொருளின் விலையானது 35.3%-ஆக அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் கடந்த வருடத்தை காட்டிலும் 8.5% உணவுப்பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று, ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததிலிருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்திருக்கிறது. எனவே ஜெர்மன் நாட்டில் எரிபொருளின் விலை வெகுவாக அதிகரித்து பணவீக்கமும் அதிகரித்ததாக  ஜெர்மன், மத்திய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இதற்கு முன்பு கடந்த 1981-ஆம் வருடத்தில் ஈரான் மற்றும் ஈராக் நாடுகளுக்கிடையே நடந்த போர் காரணமாக கனிம எண்ணெய் விலை உயர்ந்தது. அப்போது, ஜெர்மன் நாட்டில் இதே போன்ற பண வீக்கம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |