Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“உரிய ஆவணம் இல்லை” 110 வாகனங்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

உரிய ஆவணம் இன்றி இயங்கிய 110 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து இடங்களிலும் வட்டார போக்குவரத்துதுறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் வடக்கு, தெற்கு மற்றும் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் ஆகியோர் தலைமையில் வாகன ஆய்வாளர்கள் 3,811 வாகனங்களை ஆய்வு செய்துள்ளனர்.

அதில் 891 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 11 லட்சத்து 38 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும் 7 லட்சத்து 52 ஆயிரத்து 633 ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் தகுதி சான்று புதுப்பிக்காமல், அனுமதி சீட்டு இல்லாமல், வரி செலுத்தாமல் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய 110 வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |