Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் பெரும் பரபரப்பு…. மோசடியில் ஈடுபட்டதாக….6 பேர் மீது வழக்கு பதிவு….!!!!!!!

ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உட்பட 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு முன்னாள் மந்திரி நாராயணசாமி போன்ற 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்ற விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அமராவதி உள் வட்டச் சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு முன்னாள் மந்திரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இருந்தபோது அமராவதி உள் வட்டச் சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக ஒய் எஸ் ஆர் காங்கிரசின் மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ஆலராமகிருஷ்ண ரெட்டி கடந்த மாதம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு முன்னாள் மந்திரி நாராயண மற்றும் பலர் மீது சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் நகராட்சி துறை மந்திரியாக இருந்து நாராயணா நேரடியாக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக முன்னாள் மந்திரிகள் லிங்கமனேனி, வெங்கட சூர்யா, ராஜசேகர் மற்றும் லீவில் ப்ராஜெக்ட் மற்றும் ராமகிருஷ்ணா ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் அஞ்சனிகுமார் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அவர்கள் மீதும் சிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்தநிலையில் அமராவதியை  தலைநகராக அமைக்க விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட  நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |