Categories
மாநில செய்திகள்

கபாலீஸ்வரர் கோவிலுக்கு ஆபத்தா….? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு….!!!!!!!!

நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில்கள் பற்றி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை நான்காம் அடித்தளம் அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. மேலும் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோயில், வடபழனி வெங்கீஸ்வரர் கோவில், வடபழனி அழகர் பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தரராஜ பெருமாள் கோவில், வளசரவாக்கம் வெல்வீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கோவில் குளம் ஆகிய பிரதான கோவில் கட்டிடங்கள் அமைந்திருக்கின்றன.

இந்நிலையில் இந்த கோவில்கள் பற்றிய  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை முடிக்காமல், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த கவுதமன், ரமணன், விஜய் நாராயணன் போன்றோர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். மேலும் அந்த மனுவில், மெட்ரோ ரயில் நான்காவது வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்பட்ட போதும், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

முதல்கட்ட பணிகள் நடை பெற்றபோது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், அதன் அருகே உள்ள விக்டோரியா அரங்கம் உள்ளிட்ட புராதன கட்டிடங்களில்  பாதிப்பு ஏற்படாத  வகையில் சுரங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டு கூறியுள்ளனர். மேலும் நூறு ஆண்டுகளுக்கு மேலான கோவில்களின் பட்டியலை தயாரித்து, புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பட்டியல் தயாரிக்காததால், மெட்ரோ ரயில் 4ஆவது வழித்தடத்தில் உள்ள கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும்  மனுவில் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுவதால் தேர் திருவிழா போன்ற  கோவில் உற்சவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மெட்ரோ ரயிலுக்காக அரசு மற்றும் தனியார் சொத்துக்களை கையகப்படுத்துவதை விடுத்து கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகவும் மனுவில் கூறை கூறியுள்ளனர். மெட்ரோ ரயில் நான்காம் வழித்தடத்தினால்  பாதிக்கப்படும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட ஏழு கோவில்களையும் புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும். மேலும்  இந்த கோவில்கள் பற்றி  சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் மெட்ரோ ரயில் நான்காம் வழித்தட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கோடு இந்த மனுக்களையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

Categories

Tech |