கரடிகள் இரவு நேரத்தில் வீடுகளின் கதவை தட்டுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தேயிலைத் தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜெகதளா கிராமத்தில் கரடியின் நடமாட்டம் காணப்படுகிறது.
இந்த கரடி இரவு நேரத்தில் வீடுகளின் கதவை தட்டுவதால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.