பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சதீஷ்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த சதீஷை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் காட்டிற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து பொதுமக்கள் உடனடியாக சதீஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சதீஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.