Categories
உலக செய்திகள்

நம்ம இடமா இது… பார்த்து வியந்த கோலா…. நெஞ்சை உருக்கிய காட்சி..!!

ஆஸ்திரேலிய காட்டு தீயில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் அதன் வாழ்விடத்தில் விடப்பட்ட போது, அதனை கண்டு கோலா கரடிகள் திகைத்து போன நிகழ்வு பார்ப்பதற்க்கே பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

 

கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ கோர தாண்டவம் ஆடிவருகிறது. இதில், பல மில்லியன் ஹெக்டேர் நிலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. அதுமட்டுமின்றி கோலா கரடிகள் உட்பட பல விலங்குகளின் உயிரையும் காட்டுத் தீ பறித்துள்ளது. காட்டு தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட அடிலெய்டில் (Adelaide) ஏராளமான வன உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்துபோன நிலையில், ஒரு கோலா கரடி மட்டும் தீயணைப்புத்துறை வீரர்களால் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தது.

 

இந்த நிலையில் புதர் தீயின் தாக்கம் முன்பை விட சற்று குறைந்துள்ளதால் ஐசக் என்று பெயரிடப்பட்ட அந்த கோலா, மீண்டும் அது வாழ்ந்து வந்த இருப்பிப்பிடத்தில் விடப்பட்டது. ஆனால் அங்கு வந்தவுடன் ஐசக் (கோலா), தனது காடு முழுவதும் எரிந்து போனதை பார்த்து பிரமித்தது. மேலும்  வித்தியாசமான கருகிய வாசனை வந்ததாலும் சற்று தயங்கியே நின்றது. பிறகு சிறிது நேரம் கழித்து இயல்புநிலைக்கு திரும்பி மெதுவாக சென்று மரம் ஒன்றில் ஏறி தஞ்சமடைந்தது.

Categories

Tech |