Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தோகை விரித்து ஆடிய மயில்….. சிறிது நேரத்தில் பலியான சோகம்…. சோகத்தில் பொதுமக்கள்…!!

பேருந்து மீது மோதி மயில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடியில் இருந்து ஆலங்குடி நோக்கி அரசு டவுன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து குளப்பன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தைலமரக்காட்டில் இருந்து வேகமாக பறந்து வந்த ஆண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடி மீது மோதியது. இதனால் கண்ணாடி உடைந்து சிதறிய தோடு மயில் பேருந்தின் முன் இருக்கையில் விழுந்து இறந்துவிட்டது. இதனை அடுத்து பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு வனத்துறையினர் மயிலின் உடலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இதற்கிடையில் இறப்பதற்கு சிறிது நேரம் முன் தான் மயில் தோகை விரித்து ஆடியது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து ரசித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் மயில் பேருந்து மோதி இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |