Categories
தேசிய செய்திகள்

27 டாக்டர்கள் சிகிச்சையளிக்கிறார்கள்…. என்னனு கண்டுபிடிக்க முடியல…. அதிர்ச்சி தகவல்….!!!!

நான் சாகவில்லை சமாதியில் செட்டில் ஆகிவிட்டேன் என்று நித்யானந்தா கூறிய  தகவல் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

கைலாசா நாட்டில் இருப்பதாக கூறி அவ்வப்போது பேசிவந்தார். இதனிடையே அவரின் அறிவிப்பு ஒன்று இப்போது பல கேள்விகளை முன்வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக நித்யானந்தா இறந்து விட்டதாக பலரும் இணையத்தில் பரப்பி வருவதாக கூறி வந்த நிலையில், “நான் இன்னும் இறக்கவில்லை ஆனால் சமாதியில் செட்டிலாகி விட்டேன்” என தெரிவித்துள்ளார். 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தனக்கு என்ன என்பதை கண்டறிய கூட முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

நித்திய பூசைகள் மட்டும் தினமும் நடந்து வரும் நிலையில் தன்னால் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை என்றும் கூறுயுள்ளார். என்னை பார்க்க வருபவர்கள் யாராக இருந்தாலும் திருவண்ணாமலையில் உள்ள அருணகிரி யோகேஸ்வர சமாதிக்கு சென்று விளக்கை ஏற்றினால் நிச்சயம் தன்னை பார்க்க முடியும் என்று கூறியிருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |