அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு தலைமை செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்கள்.
தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதில் செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அன்பழகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தற்போது தமிழக தலைமைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.