Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென அதிகரித்த பிரசவ வலி…. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. பணியாளர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

ஆம்புலன்சிலேயே பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி காலனியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எஸ்தர் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான எஸ்தருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வினோத்குமார் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அங்கு விரைந்து சென்று எஸ்தரை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் ஆம்புலன்சில் வைத்து எஸ்தருக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதில் எஸ்தருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாய் சேய் இருவரையும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |