Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தென்பெண்ணையாற்றில் கலந்த கழிவு நீர்”… சூழ்ந்த ரசாயன நுரை…!!!!

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதால் ரசாயன நுரையாக காட்சியளிக்கின்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை இருக்கின்றது. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் தற்பொழுது அதிக அளவு கழிவு நீர் கலக்கப்பட்டு தண்ணீர் பச்சை நிறமாக காட்சி அளிக்கின்றது. தற்பொழுது பெங்களூர் மற்றும் ஓசூர் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.

இதைப் பயன்படுத்திக்கொண்டு தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் கடந்து விடுகின்றார்கள். இதனால் அந்த அணையானது தற்பொழுது ராசாயன நுரையால் சூழப்பட்டு தண்ணீரே தெரியாத அளவுக்கு நுரை தேங்கி நிற்கின்றது. மேலும் அவ்வழியாக நடந்து செல்லும்பொழுது துர்நாற்றம் வீசப்படுகின்றது. இதனால் விவசாயிகள் பாசனத்துக்கு நீர் பாய்ச்ச முடியாமல் கவலை அடைந்திருக்கின்றனர். ஆகையால் அணையில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |