ஸ்பெயின் நாட்டு பெண்களுக்கு, அந்நாட்டு அரசு சிறந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள அரசு பெண்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்கள் தங்களின் மாதவிடாய் காலத்தின் போது, 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தமானது, வருகின்ற செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்ற படுவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டில் உள்ள மிகவும் தாழ்த்தப்பட்ட சமுதாய பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் மற்றும் பள்ளிகளில் தேவைப்படும் பெண்களுக்கும் சானிட்டரி நாப்கின் பேட்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஸ்பெயின் நாட்டு பெண்களின் நீண்ட கால கோரிக்கையான, சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டம்பன்களின் விற்பனை விலையிலிருந்து, வாட் வரியை நீக்குவதற்கு தொடர்பான பிரச்சனையும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் எந்த ஐரோப்பிய நாடுகளும் இதுவரை இம்மாதிரியான முடிவை எடுத்ததில்லை. அந்த வகையில் இந்த பெருமையை ஐரோப்பிய நாடான ஸ்பெயின் நாடு தட்டி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.