அமெரிக்காவின் மிகப் பெரிய நீர்தேக்கமான மீட் ஏரி காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து மோசமாகி முற்றிலும் வறண்டு போகும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மனித உடல்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் முறையாக ஏரிக்கரை ஓரத்தில் சேற்றில் சிக்கிய பீப்பாய் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த உடல் 1970 அல்லது 80-களில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவருடைய உடல் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தநிலையில் அந்த உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் அந்த ஏரியில் இருந்து பல மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.