Categories
உலக செய்திகள்

போர் தொடுத்ததை கண்டிக்கும் விதமாக…. ரஷ்யாவில் இருந்து வெளியேறிய பிரபல நிறுவனம்….!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து ரஷ்யாவில் இருந்து சிமென்ஸ் நிறுவனம்  வெளியேறியது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவ படைகள் போர் தொடுத்ததை கண்டித்து ஜெர்மனி சிமென்ஸ் நிறுவனமானது ரஷ்யாவிலிருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் 1851-ஆம் ஆண்டு மாஸ்கோ, செயின்ட் பீட்டர்பர்க் போன்ற நகரங்களில் சீமென்ஸ் நிறுவனம் தந்தி தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த சீமென்ஸ் நிறுவனமானது கடந்த 170 வருடங்களாக ரஷ்யாவில் செயல்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சீமென்சின் மொத்த வருவாயில் இருந்து ஒரு விழுக்காடு ரஷ்யாவிற்கு கிடைத்துள்ளது. மேலும் ரஷ்யாவில் சிமென்ஸ் நிறுவனத்தின் அதிவேக ரயில் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணியில் மூவாயிரம் பேர் வேலை பார்த்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |