டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை ஐஆர்சிடிசி அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய சட்டம் அமலுக்கு வருவதால் மில்லியன் கணக்கான ஐஆர்சிடிசி பயனர்கள் தங்களுடைய கணக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும்.
இந்த இரண்டு விவரங்களை சரிபார்க்காத பயனாளர்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. அதாவது குறைந்தது இரண்டு வருடங்களாக ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு இந்த விதி பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி சரிபார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
ஐஆர்சிடிசி ஆப்ஸ் அல்லது இணையதளத்தில் உள்நுழைந்து சரிபார்ப்பு சாளரத்தில் கிளிக் செய்யவும்.
இங்கே நீங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.
இந்த இரண்டு விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, சரிபார்க்கவும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் மொபைலில் OTP வரும். அதை உள்ளிட்டு மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்.
இதேபோல், மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பிறகு, உங்கள் மெயில் ஐடியையும் சரிபார்க்கலாம்.
இது சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்கிறது. இப்போது உங்கள் கணக்கில் இருந்து ஆன்லைனில் எந்த ரயிலுக்கும் டிக்கெட் பதிவு செய்யலாம்.