Categories
தேசிய செய்திகள்

முன்கூட்டியே விடுதலை கோர….. தண்டனை கைதிகளுக்கு உரிமை இல்லை…. ஐகோர்ட்டு உத்தரவு….!!!!

முன்கூட்டியே விடுதலை கோர தண்டனை கைதிகளுக்கு உரிமை இல்லை என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சோமு, பாலமுருகன், ஹரிஹரன் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இதில் பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தனது மகன் ஹரிகரனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அவரின் தாயார் சரோஜினி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஆஜராகி மனுதாரர் ஆயுள்தண்டனை பெற்றுள்ளார். சிறையில் நன்னடத்தை விதியை அவர் கடைபிடிக்கவில்லை என்றும் வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் முன்கூட்டியே விடுதலை கோர சட்டப்படி தண்டனை கைதிகளுக்கு உரிமை இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |