Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு படித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள குரும்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வெங்கடேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெங்கடேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |