டியூஷன் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெல்லுஅள்ளி கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரகாசம்(32) என்ற மகன் இருந்துள்ளார். டியூஷன் ஆசிரியரான சிவப்பிரகாசம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவப்பிரகாசம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலேயே சிவப்பிரகாசரின் உடலை எரித்து விட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மாதப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.