ஆந்திரமாநிலம் கடப்பா மாவட்டம் இஸ்லாம்புரத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியில் செம்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள டெக்கரேஷன் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் செம்பு, அந்த சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனையடுத்து செம்பு, அச்சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து இருக்கிறார். அதன்பின் தன் செல்போனிலுள்ள வீடியோவை சிறுமியிடம் காட்டி நண்பர்களிடமும் உல்லாசமாக இருக்க வேண்டும் எனவும் இல்லையெனில் வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டினார்.
இந்த மிரட்டலுக்கு பயந்துபோன சிறுமி அவனது நண்பர்களிடமும் உல்லாசமாக இருக்க ஒப்புக் கொண்டார். அதனை தொடர்ந்து செம்பு தன் நண்பர்கள் பல பேரிடம் சிறுமியை உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். சென்ற 6 மாதங்களாக இச்சம்பவம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சென்ற 4ஆம் தேதி சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது தந்தை சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை இது பற்றி பொதட்டூர் பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் அவரது புகாரை பதிவு செய்யவில்லை. அதன்பின் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருக்கும் தகவல் சமூகவலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக கடப்பா போலீஸ் சூப்பிரண்டு அன்பு ராஜனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பூஜிதா நியமிக்கப்பட்டு, குற்றவாளிகள் 4 பேரை கைது செய்தனர். அத்துடன் தலைமறைவாகவுள்ள 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.