தமிழ்நாட்டில் சர்மாவிற்கு தடை இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்ட சர்மாவை சாப்பிட்ட மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடன் சேர்த்து சவர்மா சாப்பிட்ட 18 பேர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்துவதன் மூலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மாணவி உயிரிழந்ததால் கேரளாவில் சர்மா கடைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரத்தநாட்டில் சவர்மா சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காரணத்தினால் தமிழகத்திலும் சர்மாவிற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ஆய்வுசெய்து கெட்டுப்போன இறைச்சியை வைத்திருந்த கடைகள் அனைத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: “தமிழ்நாட்டில் சர்மாவிற்கு தடை விதிக்கப்படவில்லை. கேரளாவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் தொடர்ந்து பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் சவர்மா இரண்டு மணி நேரத்திற்குள் சமைத்து விற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.