Categories
மாநில செய்திகள்

ஆம்பூர் பிரியாணி திருவிழா…. பீப் பிரியாணிக்கு தடை…. கலெக்டருக்கு வந்த சிக்கல்….!!!!!!!

பீப் பிரியாணிக்கு தடை விதித்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

ஆம்பூரில் மூன்று நாட்களுக்கு பிரியாணி திருவிழாவை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி மே 13, 14, 15 ஆகிய நாட்களில் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு பிரியாணிக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோழி, முட்டை, ஆடு போன்ற இறைச்சிக்கு மட்டுமே அனுமதி என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

மாட்டு இறைச்சியை பிரியாணி திருவிழாவில் சேர்க்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிரியாணிக்கு அனுமதி அளிக்காததை  கண்டித்துள்ள எஸ்டிபிஐ, விசிக, மமக போன்ற கட்சிகள் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பிரியாணி அனுமதிக்காவிட்டால் அதனை இலவசமாகத் தருவோம் என அதிரடியாக அறிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சியை ஏன் தடை செய்தீர்கள் ? இது அரசியலமைப்பிற்கு புறம்பானது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும் திருப்பத்தூரில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதன் காரணமாக ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |