சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மரப்பாலம் பகுதியில் கூலித் தொழிலாளியான பாபு(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.