Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“அவள் என்னை விட்டு போயிட்டா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி 8-வது மெயின் ரோடு பகுதியில் கொத்தனாரான ரமேஷ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ரமேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் ரமேஷ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |