மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள லிங்கத்தூர் கிராமத்தில் விவசாயியான சிவசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் புலியூரில் இருக்கும் சிமெண்ட் ஆலை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து சிவசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் விபத்தில் படுகாயமடைந்த சிவசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிவசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.