புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 9 மாத ஆண் குழந்தை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய கல்லை சேர்ந்த காடன் செல்வி தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த ஆண் குழந்தை பிறந்து நான்கு நாட்களிலேயே 5 லட்சம் ரூபாய்க்கு பெற்றோர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரை அடுத்து சைல்டு லைன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்த சென்ற போது, அந்த தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானது தெரிய வந்தது.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அதிகாரிகள் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.