ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் காலிபா பின் சையத் 73 வயதில் காலமானார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இவர் யுஏஇ அதிபராக இருந்து வருகிறார். இவருடைய மரணத்தை ஒட்டி 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த மூன்று நாட்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories