Categories
தேசிய செய்திகள்

பொன்மகள் சேமிப்பு திட்டம்…. புதிய விதிமுறைகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பொன்மகள் சேமிப்பு திட்டத்துக்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வங்கிகளில் பல்வேறு சேமிப்பு கணக்குகள் இருப்பது போன்று தபால் நிலையங்களிலும் இருக்கிறது. இந்த தபால் நிலைகளில் பல்வேறு சிறப்பான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் பொன்மகள் மற்றும் பொன்மகன் சேமிப்பு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பொன்மகள் சேமிப்பு திட்டத்தில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 10 வயதுக்கு மேல் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு தனியான சேமிப்பு கணக்கும், 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோருடன் சேர்ந்து கூட்டு கணக்காக தொடங்கிக் கொள்ளலாம்.

இதனையடுத்து 18 வயதை தாண்டிய பிறகு பொன்மகள் சேமிப்பு திட்டத்தின் பணத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் வருடம் தோறும் ரூபாய் 250 கெட்ட வேண்டும். இந்த பணத்தை கட்டாவிட்டாலும் தற்போது வட்டி வரும். அதன்பிறகு 18 வயது முடிவதற்கு முன்பாக அந்தப் பெண் இறந்து விட்டாலோ, ஏதாவது நோயால் அவதி பட்டாலும் சேமிப்பு கணக்கை மூடிக் கொள்ளலாம். மேலும் 2 பெண் குழந்தைகள் இருப்பவர்கள் மட்டுமே சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என நடைமுறையில் இருந்தது. ஆனால் 3 பெண் குழந்தைகள் இருப்பவர்களும் பொன்மகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கி கொள்ளலாம் என தற்போது விதி முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |