Categories
உலக செய்திகள்

விபத்தில் சிக்கிய பிரபல கார் பந்தய வீரர்… பதைபதைக்கும் வீடியோ..!!

கார் பந்தயத்தின்போது ஓடுபாதையில் இருந்து தடம் மாறிய கார், பறந்து சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

உலக சாம்பியனான ஓட் டனாக் (Ott Tanak) மற்றும் அவரது கோ-டிரைவர் மார்ட்டின் ஜார்வொஜா (Martin Jarveoja) இருவரும் மான்டி கார்லோவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தங்களது ஹூண்டாய் காரில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கினர்.

 

Image result for tanak

அதிவேகமாக சென்ற கார், பனிபடர்ந்த சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் பறந்து மரத்தில் முட்டியதுடன், மலை உச்சியிலிருந்து கீழே உருண்டு செல்லும் வீடியோ காட்சியை ஓட் டனாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Image result for tanak

மேலும், விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய இருவரும் உடல் நலம் தேறி வருவதாக ஓட் டனாக் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |