Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல டிவி தொடரில் நடித்துக் கொண்டிருந்த நடிகை”… கலைஞர் டிவியில் என்ட்ரி….!!!!

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரில் வானத்தைப்போல சீரியலில் நடித்த ஸ்வேதா நடிக்க உள்ளார்.

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களிடையே மிகவும் பிரபலமானவை. இவை டிஆர்பி ரேட்டிங் முதல் 5 இடங்களை மாறி மாறி பெற்று வருகின்றது. இந்த டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் வானத்தைப்போல சீரியல் நன்றாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது.

இந்த சீரியலில் துளசி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த ஸ்வேதா அண்மையில் தொடரிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் கலைஞர் டிவியில் கண்ணெதிரே தோன்றினாள் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் கதாநாயகியாக ஸ்வேதா நடிக்கவிருக்கிறார். தற்பொழுது தொடரின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலானது வருகின்ற ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories

Tech |