Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. தொழிலாளி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகை திருடிய மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளியம்மாள்புரம் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பீரோவில் 5 1\2 பவுன் தங்கநகை வைத்திருந்தார். இந்நிலையில் செந்தில்வேல் பீரோவை திறந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த 5 1\2 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செந்தில்வேல் இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |