சிறிய முதலீட்டில் நல்ல லாபம் பெறும் தொழில் குறித்து பார்க்கலாம்.
சிறிய முதலீட்டில் நல்ல லாபம் பெறும் தொழிலை பலரும் விரும்புகின்றனர். அவர்களுக்காக உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளி நாட்டிலும் ஏற்றுமதி செய்து நல்ல லாபம் தரக்கூடிய ஒரு தொழில் பற்றி பார்க்கலாம். அதாவது பிரியாணி தயாரிப்பதற்குப் பயன்படும் இலையை சாகுபடி செய்து நல்ல லாபம் பெறலாம். இந்த இலை பிரியாணி தயாரிப்பதற்கு மட்டுமின்றி, பல உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தேவை உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் தேவைப்படுகிறது. எனவே நவீன முறையில் பிரியாணி இலையை சாகுபடி செய்து நல்ல லாபம் பெறலாம்.
இந்த சாகுபடி செய்வதற்கு வேளாண் பல்கலைக் கழகங்களில் பிரியாணி இலை செடிகளை வாங்கிக் கொள்ளலாம். இதை ஒரு முறை சாகுபடி செய்தால் பல ஆண்டுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்தச் செடியை வாங்கிய பிறகு நிலத்தில் 5-6 மீட்டர் இடைவெளி விட்டு நட வேண்டும். இதற்கு தொடர்ந்து நீர் பாசனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்தச் செடியை உற்பத்தி செய்வதற்கு அரசிடமிருந்து மானியம் பெற்று கொள்ளலாம். மேலும் தேசிய மூலிகை வாரியத்தில் விண்ணப்பித்தால் 30 சதவீதம் வரை மானியம் பெற்று கொள்ளலாம்.