Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 14…!!

மே 14  கிரிகோரியன் ஆண்டின் 134 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 135 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 231 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1264 – இங்கிலாந்தின் மூன்றாம் என்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். சைமன் டி மொர்ஃபோர்ட் இங்கிலாந்தின் ஆட்சியாளரானார்.

1607 – ஜேம்சுடவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.

1610 – பிரான்சின் நான்காம் என்றி மன்னர் கொல்லப்பட்டார். பதின்மூன்றாம் லூயி மன்னராக முடிசூடினார்.

1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க, அவரது 4-வயது மகன் பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனானான்.

1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார்.

1800 – ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரை பிலடெல்பியாவில் இருந்து வாசிங்டன், டி. சி.க்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பமானது.

1811 – பரகுவை: எசுப்பானிய ஆளுநரை அகற்றும் நடவடிக்கையை ஒசே பிரான்சியா ஆரம்பித்தார்.

1861 – எசுப்பானியா, பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.

1879 – 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாசு கப்பலில் பிஜியை அடைந்தனர்.

1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.

1931 – சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: ராட்டர்டேம் மீது செருமனி குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவின் செண்டோர் என்ற மருத்துவக் கப்பல் குயின்ஸ்லாந்துக்கருகில் செருமானிய நீர்மூழ்கிக்கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் கொல்லப்பட்டனர்.

1948 – இசுரேல் தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இசுரேலைத் தாக்கத் தொடங்கின. அரபு – இசுரேல் போர் ஆரம்பமானது.

1955 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு கம்யூனிச நாடுகள் இணைந்து வார்சா உடன்பாடு எனப்படும் தற்காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1965 – இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.

1973 – ஸ்கைலேப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1976 – யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வெளியிடப்பட்டது.

1980 – எல் சல்வடோர் உள்நாட்டுப் போர்: சும்புல் ஆற்றுப் பகுதியில் 600 வரையான பொதுமக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1988 – ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

2004 – பிரேசில், மனௌசில் வானூர்தி ஒன்று அமேசான் மழைக்காடுகளில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 33 பேரும் உயிரிழந்தனர்.

2004 – டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், ஆத்திரேலியாவைச் சேர்ந்த மேரி டொனால்ட்சன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

2012 – நேபாளத்தில் அக்னி ஏர் வானூர்தி வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1657 – சம்பாஜி, இந்தியப் பேரரசர் (இ. 1689)

1771 – இராபர்ட்டு ஓவன், வேல்சு தொழிலதிபர், சமூக செயற்பாட்டாளர் (இ. 1858)

1883 – அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 1953)

1907 – அயூப் கான், பாக்கித்தானின் 2வது அரசுத்தலைவர் (இ. 1974)

1909 – ஜான் வெய்ன்ரைட் எவான்சு, அமெரிக்க வானியலாளர் (இ. 1999)

1918 – ஜேம்ஸ் ஹார்டி, அமெரிக்க மருத்துவர், கண்டுபிடிப்பாளர் (இ. 2003)

1923 – மிருணாள் சென், வங்காள-இந்தியத் திரைப்பட இயக்குநர்

1944 – ஜோர்ச் லூகாஸ், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்

1948 – பாப் வுல்மர், இந்திய-ஆங்கிலேயத் துடுப்பாளர், பயிற்சியாளர் (இ. 2007)

1953 – நொரடோம் சிகாமொனி, கம்போடிய அரசர்

1969 – கேட் பிளான்சேட், ஆத்திரேலிய நடிகை

1984 – மார்க் சக்கர்பெர்க், முகநூலை உருவாக்கிய அமெரிக்கத் தொழிலதிபர்

1987 – சாரீன் கான், இந்தித் திரைப்பட நடிகை

1988 – ராஜேஷ் முருகேசன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்

1989 – ஷீலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள்

1904 – பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின், உருசிய வானியலாளர் (பி. 1831)

1925 – எச். ரைடர் அக்கார்டு, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1856)

1940 – எம்மா கோல்ட்மன், இலித்துவேனிய எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் (பி. 1869)

1945 – இசிசு போகுசன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1852)

1959 – ஆத்மானந்தர், வேதாந்தி, யோகி (பி. 1883)

1996 – சிறீதரன் ஜெகநாதன், இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1951)

1998 – பிராங்க் சினாட்ரா, அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1915)

2010 – க. சண்முகம்பிள்ளை, இலங்கை மிருதங்கக் கலைஞர் (பி. 1917)

2013 – அஸ்கர் அலி என்ஜினியர், இந்திய எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் (பி. 1939)

2014 – சித்ரூபானந்தர், இலங்கை பருத்தித்துறை இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தின் நிறுவனர்

இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (இசுரேல்)

தேசிய இணைப்பு நாள் (லைபீரியா)

Categories

Tech |