பிரபல நடிகையை மர்ம நபர் ஒருவர் புகைப்படம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை நவ்நீத் கவுர் ராணா மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி தொகுதியின் எம்பி யாக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நவ்நீத்தும், அவரது கணவரும் முதல் மந்திரியின் வீட்டின் முன்பாக அனுமன் மந்திரம் ஓத முயன்றுள்ளனர். இதன் காரணமாக இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேரையும் 12 நாட்கள் சிறையில் வைத்து விட்டு விடுவித்துள்ளனர். இந்நிலையில் நடிகைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் நவ்நீத் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் போது மர்ம நபர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த போட்டோவை மர்ம நபர் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளார். இந்த நபரின் மீது மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. மேலும் மர்ம நபரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.