கேரள மாநிலத்தில் ஜில்மோல் மேரியட் தாமஸ் என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு 2 கைகளும் கிடையாது. இவருக்கு கார் ஓட்ட வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்துள்ளது. இதனால் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஜில்மோல் மேரியட் தாமஸ்க்கு 2 கைகளும் இல்லாததால் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் கொடுப்பதற்கு மறுத்துள்ளனர்.
அதன் பிறகு ஜில்மோல் தன்னுடைய கால்களால் கார் ஓட்டுவதற்கு பழகியுள்ளார். இதனையடுத்து மீண்டும் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்து ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொண்டார். மேலும் ஜில்மோல் தான் ஆசியாவிலேயே கைகள் இல்லாமல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் முதல் பெண்மணி ஆவார்.