Categories
பல்சுவை

ரயில் நிலையத்தில் மஞ்சள் நிற போர்டு…. எதற்காக தெரியுமா…? இது தான் காரணம்…!!!!

ரயில் பயணம் என்பது நீண்டதூர பயணம் ஆகும். பொதுவாக ரயிலில் எல்லாருமே சென்றிருப்போம். பயணிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. ரயிலில் பயணித்துக் கொண்டே மலை, காடுகளை கடந்து சென்று அதை ரசித்து செல்வது ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இப்படி ரயில் செல்ல வேண்டுமென்றால் ரயில் நிலையத்தில் நாம் காத்திருப்போம். அப்படி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பொழுது அங்கு மஞ்சள் நிற போர்டில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும்.

அதற்கு காரணம் என்னவென்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? அவ்வாறு எழுதப்பட்டு இருப்பதற்கு பின்னணியில் காரணம் இருக்கிறது. ரயில்வே கிராசிங் ரயில் நிலையம் என்று எல்லா இடங்களிலுமே மஞ்சள் நிறத்தில் இருக்கும். குறிப்பாக ரயில் நிலையத்தில் பல போர்டுகளில் மஞ்சள் நிறத்தில் கருப்பு வண்ணங்களில் எழுதப்பட்டிருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால், மஞ்சள் நிறம் மிகவும் பிரகாசமான நிறமாக இருக்கிறது. எனவே தூரத்தில் ரயில் வரும்போது லோகோ ரயில் ஓட்டுனருக்கு தெளிவாக தெரியும். இதுதவிர மஞ்சள் நிறம் கவனம் என்பதையும் குறிக்கிறது.

Categories

Tech |