Categories
உலக செய்திகள்

நைஜீரியா: பள்ளி மாணவியை கல்லால் அடித்து கொன்ற மாணவர்கள்…. ரீசன் என்ன தெரியுமா?…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆப்பிரிக்க நாடானநைஜீரியாவின் வட மேற்கு பகுதியிலுள்ள சோகோடோ மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் “வாட்ஸ்-அப்” குழு ஒன்றை வைத்து இருக்கின்றனர். இந்நிலையில் டெபோரா சாமுவேல் என்ற மாணவி ஒருவர் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்தும் அடிப்படையிலான கருத்துகளை அந்த “வாட்ஸ்-அப்” குழுவில் பகிர்ந்தாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கோபமடைந்த குறிப்பிட்ட அம்மதத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவரும், அந்த மாணவியை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பள்ளிக்காவலர்கள் மற்றும் தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் மாணவர்களிடமிருந்து மாணவியை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது மாணவர்கள் கற்களைவீசி அவர்களை விரட்டி அடித்த சூழ்நிலையில், மாணவியை கல்லாலே அடித்துக் கொலை செய்தனர்.

மேலும் மாணவர்கள், மாணவியின் உடலை தீவைத்து எரித்து விட்டனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் மாணவர்களை விரட்டி அடித்தனர். இவ்வாறு மதவிவகார குற்றச்சாட்டில் மாணவியை, கொலை செய்து, உடலை தீவைத்து எரித்த சம்பவமானது அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |