Categories
மாநில செய்திகள்

“முன்பதிவு இல்லா 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள்”…. வரும் 23 ஆம் தேதி முதல்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டுமாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 23ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது,

# கோவை-மேட்டுப்பாளையம் முன்பதிவு இல்லாத ஊட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு மேட்டுப் பாளையத்திற்கு மாலை 4:30 மணிக்கு சென்றடையும். பின் மேட்டுப்பாளையத்திலிருந்து மாலை 4:45 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு கோவை வந்து சேரும்.

# சேலம்- விருத்தாச்சலம்- சேலம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேலத்திலிருந்து காலை 10:05 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலத்திற்கு பகல் 1:05 மணிக்கு சென்றடைகிறது. அதன்பின் விருத்தாச்சலத்திலிருந்து பகல் 2:05 மணிக்கு புறப்பட்டு மாலை 5:05 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

# மயிலாடுதுறை-தஞ்சாவூர்- மயிலாடுதுறை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மயிலாடுதுறையிலிருந்து காலை 7:15 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 9:10 மணிக்கு சென்றடைகிறது. இதேபோன்று தஞ்சாவூரிலிருந்து மாலை 6:20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு 8:30 மணிக்கு வந்து சேருகிறது.

# காட்பாடி- விழுப்புரம்- காட்பாடி இடையில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் காட்பாடியிலிருந்து அதிகாலை 5:15 மணிக்கு புறப்பட்டு காலை 9:10 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. பின் விழுப்புரத்திலிருந்து இரவு 7:05 மணிக்கு புறப்பட்டு இரவு 11:05 மணிக்கு காட்பாடி வந்து சேருகிறது.

Categories

Tech |