வடகொரியாவில் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு 21 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய அரசு தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறி வந்தது. அதன் பின்பு அந்நாட்டின் முதல் நபருக்கு கொரோனா தொற்று உறுதியானவுடன் நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வடகொரியாவில் ஏப்ரல் மாதம் வரை மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்நாட்டில் சுமார் 3,50,000 நபர்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அங்கு தற்போது மர்ம காய்ச்சல் ஏற்பட்டு 21 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து சுமார் 2, 80,000 மக்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், 1,74,440 நபர்கள் தற்போது இந்த புதிய மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.