Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் என் கடைசி படம்…. உறுதி செய்த உதயநிதி ஸ்டாலின்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

அரசியலில் முழுவதுமாக கவனம் செலுத்த இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் பிஸியாக இருந்து வருகிறார். மேலும், படங்கள் வெளியீட்டிலும் பங்கேற்று வருகிறார். தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ”மாமன்னன்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

என்னை 'சின்னவர்' என்று அழைக்க இது தான் காரணம்! சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின்  பேச்சு! | Udhayanidhi stalin explain about why is called Chinnavar - Tamil  Oneindia

மேலும், இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள நேர்காணலில், மாமன்னன் படத்தை தொடர்ந்து முழுவதுமாக அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக கூறியுள்ளார். வேறு சில கதைகளை கேட்ட போதிலும் எதிலும் திருப்தி இல்லை எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |